சந்திராயனை வம்பிழுத்தா சும்மா விடுவோமா? பிரகாஷ்ராஜுக்கு தக்க பாடம் புகட்டிய விஜய் - சரியான பதிலடி
நேற்று வெற்றிகரமாக சந்திராயன் 3 நிலவில் கால் பதித்தது. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த நமது இஸ்ரோ விஞ்ஞானிகளை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் உலகமே பாராட்டி வருகிறது. நிலவில் தரையிறங்கியதும் தனது முதல் குறுஞ்செய்தியை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி அனைவரையும் நிம்மதியடைய செய்தது.
இந்த ஒரு நிகழ்வு எல்லார் மனதிலும் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்ள வைத்தது. ஆனால் இதையெல்லாம் கிண்டலடித்து பேசும் விதமாக பிரகாஷ்ராஜ் பதிவிட்ட அந்த ட்விட்டர் பதிவு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : நான் எவ்வளவோ கெஞ்சியும் ஒத்துக்கவே இல்லை!. அதனாலதான் அப்படி ஆச்சி!.. புலம்பும் ஜி.வி.பிரகாஷ்..
சமூகம் சார்ந்த சில நல்ல விஷயங்களை பிரகாஷ்ராஜ் செய்து வந்தாலும் இந்தியாவை கொச்சை படுத்து விதமாக இப்படி ஒரு பதிவை அவர் போட்டிருக்கவே கூடாது என பல தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரபல திரைவிமர்சகர் செய்யாறு பாலு பிரகாஷ் ராஜை பற்றி ஒரு ரகசியத்தை கூறினார். இப்படி நிலவில் சாதனை படைக்க காத்திருக்கும் இந்தியாவை பற்றி அவதூராக பேசிய பிரகாஷ்ராஜ் உண்மையில் எப்படி பட்ட மனநிலை படைத்தவர் என்பதை செய்யாறு பாலு கூறினார்.
போக்கிரி பட சூட்டிங் சமயத்தில் ஷார்ட் ரெடியானதும் பிரகாஷ்ராஜை அழைக்க அங்கு இருந்த ஒரு பையன் சென்றாராம். பல முறை அழைத்தும் பிரகாஷ் ராஜ் வரவே இல்லையாம். அதன் பிறகு பிரபுதேவா வந்து அழைத்த பிறகே வந்தாராம். இதை விஜய் பார்த்துக் கொண்டே இருந்தாராம்.
இதையும் படிங்க : எல்லாரும் ஏமாத்திட்டாங்க!.. சரக்கடிச்சி பல நாள் ஆச்சி!.. மேடையில் புலம்பிய விமல்!…
மறு நாளும் அந்த பையன் போக பிரகாஷ் ராஜ் வர மறுத்து விட்டாராம். அதன் பிறகு அந்த பையனை அழைத்து விஜய் விசாரிக்க , சரி நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன் என இந்த முறை பிரகாஷ் ராஜ் கேரவனை விஜய் தட்டியிருக்கிறார். உள்ளே இருந்து எஸ். கமின் என சத்தம் வர விஜய் உள்ளே போயிருக்கிறார்.
என்ன செல்லம் என பிரகாஷ் கேட்க, ஷார்ட் ரெடியாகி விட்டது, நம்ம இரண்டு பேரும் உள்ள காட்சிதான், வாருங்கள் என அழைத்திருக்கிறார். உடனே பிரகாஷ்ராஜுக்கு புரிந்து விட்டதாம். நமக்கு பாடம் புகட்டவே விஜய் வந்திருக்கிறார் என்பதை புரிந்து அடுத்த நாளில் இருந்து தானாக செட்டுக்குள் வந்துவிட்டாராம் பிரகாஷ்ராஜ்.