ரஜினி 170ல் அமிதாப் பச்சனா? அவர் போட்ட கண்டீசன கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தன்னுடைய சினிமா கெரியரில்அதிக வெற்றிகளை மட்டுமே கொடுத்து வந்தவர் .ஆனால் சமீப காலமாக ஒரு சரியான வெற்றிப் படம் அமையவில்லை .இவர் நடிப்பில் கடைசியாக வந்த அண்ணாத்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தழுவியது.
வெற்றியை நோக்கி ரஜினி
அண்ணாத்த படத்திற்கு பிறகு கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் ரஜினி. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு பிறகு ரஜினி அவரது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் பட இயக்குனரான ஞானவேல் இயக்க உள்ளார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கான அப்டேட் தான் தற்போது வைரலாகி வருகின்றது.
இரண்டு சூப்பர் ஸ்டார்கள்
ரஜினியின் 170 ஆவது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது . அதாவது அமிதாப்பச்சனை வைத்து ஷார்ட் எடுக்க வேண்டும் என்றால் முதலில் வேறு ஒருவரை வைத்து அதற்கான செட்டிங்ஸ் எல்லாம் போட்ட பிறகு லைக் செட்டிங் எல்லாம் முடிவடைந்த பிறகு சார் ரெடி என்று சொன்ன பிறகுதான் அமிதாப் உள்ளே வருவாராம்.
வந்ததும் அவருக்கு உண்டான டயலாக்கை பேசி முடித்துவிட்டு போய்விடுவாராம். மேலும் என பெரும்பாலும் கிரீன் மேட்டில் நின்று கொண்டு தான் நடிப்பாராம் .அதனால் இந்த அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மும்பையில் படமாக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறார்களாம். மேலும் அந்த டயலாக்கில் திடீரென ஏதாவது மாற்றம் இருந்தால் கூட அவர் நடிக்க முடியாது என சொல்லிவிட்டு போய்விடுவாராம். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாக வைத்துக் கொண்டுதான் ஷார்ட்டுக்கு அமிதாப்பை அழைப்பார்களாம்.
இதையும் படிங்க : விலகிய எம்ஜிஆர்; சிவாஜியை நடிக்க வைத்து ஹிட் கொடுத்த டைரக்டர்.. அட அந்த படமா?!.
பல்பு வாங்கிய எஸ்.ஜே.சூர்யா
இப்படி ஒரு சம்பவம் தான் எஸ் ஜே சூர்யா வின் உயர்ந்த மனிதன் படத்திலும் நடந்திருக்கிறது .இன்னும் வெளி வராத அந்தப் படத்தில் அமிதாப் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதேபோல் எல்லாவற்றையும் ரெடியாக வைத்துக் கொண்டு அவரை அழைத்து இருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் உங்க டயலாக்கை மாற்றி விட்டோம். அதனால் இதைப் படித்து பேசுங்கள் என கூறினார்களாம் .உடனே கோபம் கொண்ட அமிதாப் படப்பிடிப்பை விட்டு போய்விட்டாராம்.