லியோல செஞ்ச தப்ப இனி செய்யக் கூடாது! உஷாரா முரட்டு வில்லன தட்டித் தூக்கிய லோகேஷ் - மிரள வைக்கும் ரஜினி171

Rajini171: ஒரு பக்கம் லியோ பரபரப்பு. இதே ஃபார்மோட ரஜினி171க்கு லோகேஷ் வந்தால் தலைவர் படமும் இதே கதிதான் என புலம்பல் இன்னொரு பக்கம். ரஜினி ரசிகர்கள் இப்பவே தலைவா கொஞ்சம் யோசியுங்க என சமூக வலைதளங்களில் கர்ஜித்து வருகின்றனர்.

இருந்தாலும் லோகேஷ் இனிமேலாவது இந்த சமூகத்திற்கு எதிரான சில விஷயங்களை கையில் எடுக்காமல் இருந்தால்தான் ஒரு நல்ல படத்தை அவரால் கொடுக்க முடியும் என கோடம்பாக்கத்தில் அறிவுரை கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: இப்பதான் தெரியுது! லியோவை டைரக்ட் பண்ணது லோகேஷும் இல்ல.. ரத்னாவும் இல்ல!. என்னப்பா சொல்றீங்க!..

ஏற்கனவே லியோ படத்தில் மெயின் வில்லனாக சஞ்சய் தத்தை காட்டிய விதம் ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்தியது. ஒரு மிருகத்தனமான கொடூர வில்லனாக கே.ஜி.எஃபில் மாஸ் காட்டிய சஞ்சய் தத்தை ஒரு கோமாளியாக காட்டியிருக்கிறாரே என புலம்பி வருகிறார்கள்.

ஒரு படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே அளவு வில்லனுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். விஜய் அளவுக்கு மாஸ் உள்ள வில்லனாக காட்டவேண்டும். ஆனால் அதில் லோகேஷ் கோட்டை விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் அதை சிறப்பாக செய்திருந்தார்.

இதையும் படிங்க: நடிப்பு அரக்கனை இழுத்து போட்ட தளபதி68..! ஒரு மினி கோலிவுட்டே உள்ள தான் இருக்கு போல..!

இந்த நிலையில் அடுத்து ரஜினியுடன் லோகேஷ் இணைய இருக்கிறார். ரஜினியின் 171வது படத்தை லோகேஷ்தான் இயக்க இருக்கிறார். விக்ரம் படத்தை பார்த்துதான் லோகேஷ் மீது ஒரு ஈர்ப்பு ரஜினிக்கு வந்தது.

லோகேஷுடன் இணையும் படம்தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என ரஜினி சொன்னதாகவும் சில செய்திகள் வெளிவந்தன. அப்போ இவர்கள் இணையும் படம் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக இருக்க வேண்டும்?

இதையும் படிங்க: தீயாக பரவும் விஜய்-த்ரிஷா லிப்கிஸ் புகைப்படம்..! மோசம் போய்ட்டியேமா! கதறும் குந்தவை ரசிகர்கள்…!

அதனால் ரஜினி171க்கு இப்பவே ஒரு மாஸ் வில்லனை தேர்ந்தெடுத்து விட்டதாக சில தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. சலார் பட போஸ்டரை பார்த்த லோகேஷுக்கு அதில் வில்லனாக நடித்திருந்த பிரித்விராஜின் போஸ்டரை பார்த்தாராம்.

அதில் பிரித்விராஜ் பார்ப்பதற்கு மிரட்டும் தொணியில் பக்கா வில்லனாகவே தோன்றினாராம். இவரையே ரஜினி171 படத்திற்கும் போட்டால் என்ன என யோசிக்கிறாராம் லோகேஷ். இதை அறிந்த ரசிகர்கள் பிரித்விராஜ் ஒரு அபாரமான நடிகர். ரஜினிக்கு வில்லனாக கச்சிதமாக இருப்பார் என்றும் சொல்லிவருகிறார்கள்.

 

Related Articles

Next Story