‘ரிதம்’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் நடிக்க இருந்த நடிகை! லைஃபே மாறியிருக்குமே
Rhythm:2000 ஆம் ஆண்டு அர்ஜுன், மீனா நடித்து வெளியான திரைப்படம் ரிதம். இந்த படத்தில் ஜோதிகா, லக்ஷ்மி, நாகேஷ், மணிவண்ணன் ,ரமேஷ் அரவிந்த் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் .படத்தை வசந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவுக்கு சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது.
படத்தை பிரமிடு நடராஜன் தயாரித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட். இந்த நிலையில் ரிதம் படத்தில் ஜோதிகா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய செய்தி இப்போது வைரலாகி வருகின்றது .சின்ன காட்சியில் ஜோதிகா வந்தாலும் படம் முழுக்க ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் ஜோதிகா.
இதையும் படிங்க: கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்கு அனிருத் வேணும்… யாரோ தாக்கப்பட்டாங்களோ?
அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் மிக அற்புதமாக அமைந்திருந்தது. அந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை விந்தியாவாம். சங்கமம் படத்தின் மூலம் அறிமுகமான விந்தியா முதலில் ரிதம் படத்தில் நடிப்பதாக இருந்ததாம். சென்னையில் ஒரு பார்ட்டிக்கு தன் உறவினர்களுடன் வந்த விந்தியாவை அர்ஜுன் பார்த்து வசந்திடம் சொல்லி இருக்கிறார்.
உடனே வசந்த் அந்த இடத்திலேயே விந்தியாவை சில போட்டோக்கள் எடுத்து பிரமிடு நடராஜனிடம் போய் கொடுத்தாராம். ரிதம் படத்தில் ஜோதிகா கேரக்டருக்கு இவர்தான் நடிக்க போகிறார் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பிரமிடு நடராஜனை பார்க்க வர அவர் டேபிளில் இருந்த விந்தியாவின் புகைப்படத்தை பார்த்து என்னுடைய படத்திற்கு ஒரு புதுமுக நடிகையைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..
இவர் சரியாக இருப்பார் என கூறினாராம். உடனே வசந்த் நான் இவரை அறிமுகம் செய்யப் போகிறேன். ரிதம் படத்தில் இவர்தான் நடிக்கப் போகிறார் என கூறினாராம். உடனே சுரேஷ் கிருஷ்ணா விந்தியாவிடம் சின்ன கேரக்டரில் அந்த படத்தில் நடிக்க போறீங்களா அல்லது ஒரு ஹீரோயினாக என் படத்தில் அறிமுகமாக போகிறீர்களா என கேட்டாராம்.
அதற்கு விந்தியா என்னை முதலில் போட்டோ எடுத்தது வசந்த். அதனால் அவர் படத்திலேயே நடிக்கிறேன் என சொன்னாராம். தொடர்ந்து இந்த பேச்சு போய்க் கொண்டிருக்க கடைசியில் வசந்த் கன்வின்ஸ் ஆகி சுரேஷ் கிருஷ்ணாவே விந்தியாவை அறிமுகம் செய்யட்டும் என விட்டுக் கொடுத்தாராம்.
இதையும் படிங்க: விஜய்சேதுபதி நடித்த படத்தில் முதலில் டிக் ஆனவர் அஜித்தா? இயக்குனரே சொன்ன சீக்ரெட்
அதன் பிறகு தான் சங்கமம் படத்தில் விந்தியா முதன்முதலில் அறிமுகமாகி இருக்கிறார். அந்த படத்தில் விந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் மார்கழி திங்கள் அல்லவா என்ற பாடல் இப்போது வரை அனைவருக்கும் விருப்பமான பாடலாகவே அமைந்திருக்கும்.