அதிக சம்பளம் கேட்டு ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்.. விக்ரமுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம். ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். நடிப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்ள விரும்பி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் விக்ரம்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்திற்கு மெனக்கிடும் இவரது ஆர்வம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். ஆரம்பகாலங்களில் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வந்த விக்ரம் சற்றும் மனம் தளராமல் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உழைப்பை கொடுத்துக் கொண்டு வரும் உன்னதமான நடிகராக இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்த படத்துக்காக கமல் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? உலக நாயகனின் மெய் சிலிர்க்கவைக்கும் டெடிகேஷன்…
இவரின் கெரியரில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம். இந்த படத்தை தயாரித்தவர் கந்தசாமி. இவர் தான் பாலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். சேது படம் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அனைவரும் அறிந்த ஒன்று.
காதலுக்காக பல துயரங்களை படும் ஹீரோ பற்றிய கதை தான் சேது. முரட்டு இளைஞனாக இருக்கும் நாயகன் பெண்ணின் மீதுள்ள காதலால் கடைசியில் தன் புத்தியை இழக்கும் மனிதனாக மாறும் கதையாக அமைந்திருக்கும். இந்த கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட 9 நடிகர்களை அணுகினாராம் பாலா.
ஆனால் யாரையும் பிடிக்கவில்லையாம் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு. அதில் இவர்கள் முதலில் அணுகியது நம்ம நவரச நாயகன் கார்த்திக்கை தானாம். கார்த்திக்கை பூமணி படத்தின் படப்பிடிப்பில் பாலாவும் தயாரிப்பாளர் கந்தசாமியும் சந்தித்திருக்கின்றனர்.
கார்த்திக்கை வைத்து ஒரு 5 லட்சத்திற்கு சம்பளம் பேசி முடித்து விட்டு சேது படத்தில் நடிக்க வைத்துவிடலாம் என்று போயிருக்கின்றனர். ஆனால் கார்த்திக் கேட்டதோ 40 லட்சம் சம்பளமாம். உடனே தயாரிப்பாளர் இதெல்லாம் நமக்கு சரிபடாது என்று கடைசியாக விக்ரமை அணுகியுள்ளனர். இந்த தகவலை கந்தசாமியே தெரிவித்தார்.