சமந்தா சொன்ன மாதிரியே படம் ப்ளாப்! வேணானு சொல்லியும் கேட்கல.. புலம்பும் இயக்குனர்
தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் தன்னுடைய நடிப்பால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். இவருக்கு என தனி ஃபேன்ஸ் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சமந்தாவுக்கு இருக்கும் ரசிகர்கள்தான் அதிகம்.
தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா. ஆனால் அதற்கு முன்பாகவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு செகண்ட் ஹீரோயினாக நடித்தார். அதே படம் தெலுங்கில் ரீமேக் ஆக அதில் ஹீரோயினாக நடித்தார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்த சமந்தா விஜயுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
தற்போது மையோசிட்டிஸ் என்ற ஒரு தோல் நோயால் அவதிப்பட்ட சமந்தா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உடல் நலம் தேறி வருகிறார். இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட்டடித்த படமான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா நடித்த ரோலில் சமந்தாதான் நடித்திருந்தார். ஆனால் தமிழில் கிடைத்த வெற்றி தெலுங்கில் கிடைக்கவில்லை.
ஆரம்பத்தில் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போறேன் என ப்ரேம் சொன்னதும் சமந்தா ‘ஏன். அதை அப்படியே விட்டு விடுங்கள்’ எனக் கூறினாராம். ஆனால் கடைசியில் அதில் சமந்தாவே நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம். தெலுங்கில் ரிலீஸாகும் போது அதற்கு முன்பே அந்த படத்தை தமிழில் நிறைய பேர் பார்த்து விட்டார்களாம்.
அதனால் சவுத்தில் படத்திற்கான ஸ்கோப் குறைந்து விட்டதாகவும் சமந்தா சொன்னது சரிதான் என யோசித்ததாகவும் ஒரு பேட்டியில் 96 இயக்குனர் பிரேம் கூறியிருக்கிறார்.