இதுதான் அந்த ஐகானிக்கா? வைரலாகும் ‘தளபதி 69’ படத்தின் கதை.. சும்மா கில்லி ஆடுவாப்ல தளபதி

Thalapathy 69: ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் பார்வையும் இப்போது விஜயின் பக்கம் தான் திரும்பி இருக்கிறது. ஒரு பக்கம் அவருடைய அரசியல் ஈடுபாடு இன்னொரு பக்கம் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் என ரசிகர்களை ஒரு விறுவிறுப்பிலேயே வைத்துக் கொண்டு வருகிறார் விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் விஜய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மீனாட்சி சவுத்ரி சினேகா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கோட். அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான 69 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார்? யார் தயாரிக்கப் போகிறார் என்ற ஒரு போட்டியே இருந்து வந்தது.

இதையும் படிங்க: கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்த லோகேஷ்!.. தயாராகும் ரஜினி!. கேப்பு விடாம அடிக்குறாங்களாம்!..

ஏனெனில் இதுதான் அவருடைய கடைசி படம் என சொல்லப்பட்டது தான் காரணம். இந்த படத்தை முடித்துவிட்டு நேரடியாக அரசியலில் களமிறங்க போகிறார் விஜய். இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பெட்டியில் கூறும் ‘விஜய்யின் கடைசி படம் என்பது ஒரு ஐகானிக் படமாக இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த படத்திற்கு பிறகு அவர் அரசியலுக்கு செல்ல இருப்பதால் அதனுடைய தாக்கம் அவருடைய கடைசி படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்’ என தனஞ்செயன் ஒரு பேட்டியில் ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் அவருடைய 69 ஆவது படத்தை பற்றிய அப்டேட் நேற்று வெளியானது. இந்த படத்தை கே வி என் நிறுவனம் தான் தயாரிக்கப் போவதாகவும் ஹெச் வினோத் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் ஒரு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஒரு அப்டேட்டும் இன்று வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ஷாலினிக்கு ஆபரேஷன்!.. அஜர்பைசானில் அஜித்!.. விடாமுயற்சிக்காக வேலை பார்க்கும் ஏ.கே!..

அதாவது இந்த படத்தில் விஜய் ஒரு முழு அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறாராம். அதற்கு ஏற்ப கரை வேட்டி துண்டு அணிந்து ஒரு பக்கம் அரசியல்வாதி எப்படி இருப்பாரோ அந்த ஒரு கெட்டப்பில் நடிக்க இருக்கிறாராம் விஜய். இந்த ஒரு செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .எச்.வினோத்தை பொருத்தவரைக்கும் அவரும் ஒரு நல்ல அரசியல் பேசக்கூடியவர் தான். அதனால் இந்த படம் விஜய்யின் கெரியரில் என்றுமே ஒரு ஐகானிக் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story