Categories: Cinema News latest news

வில்லன தேடி நான் போறேன்! அடுத்த வேட்டைக்கு தயாரான ஜெயம் ரவி – ‘தனி ஒருவன் 2’வில் மிரட்டப் போகும் நடிகர்

கிட்டத்தட்ட 8 வருடங்களை கடந்தாலும் ஜெயம் ரவி நடிப்பில் தீனி போட்ட படமாக அமைந்தது தனி ஒருவன். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாதான் இயக்கியிருந்தார். அதுவரை சொல்லாத ஒரு கதையில் அமைந்த படமாக தனி ஒருவன் படம்  அமைந்ததால் ரசிகர்களின் அபிமானங்களை பெற்ற படமாக விளங்கியது.

படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். மெயில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருப்பார். அவர்களுடன் தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்தோடு இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.

இதையும் படிங்க : கோடி என்ன கொடியிலயா தொங்குது! பிச்சி பிச்சி கொடுக்கிறாங்க – தாறுமாறாக உயர்ந்த நெல்சனின் சம்பளம்

இப்போது பெரிய பெரிய நடிகர்கள் வில்லனாக நடிக்கிறார்கள் என்றால் அதற்கு விதை போட்டது இந்தப் படம் தான். அரவிந்த்சாமியை வில்லனாக நடிக்க வைத்து வில்லன் கதாபாத்திரத்திற்கே ஒரு பெருமையை கொடுத்தவர் இயக்குனர் மோகன் ராஜா.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஒரு ப்ரோமோ வீடியோ வெளியானது. இரண்டாம் பாகத்திலும் நயன் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும் என மோகன் ராஜா ஒரு பேட்டியில் கூறினார்.

வில்லனாக அனைவரும் எதிர்பார்ப்பது பகத் பாசில் தான். அவர் நடிப்பாரா? என்ற கேள்வியை நிரூபர் முன் வைத்தார். அப்போது மோகன் ராஜா இந்த ப்ரோமோ வீடியோ பார்த்ததும் முதல் ஆளாக பகத் பாசில் தான் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்றும்,

இதையும் படிங்க : பிரபல அரசியல் தலைவரின் பயோபிக்கில் நடிக்க இருக்கும் சரத்குமார்! ரெண்டு பேருக்குமே செட் ஆகாதே – எப்படி?

நானும் அவரும் நல்ல நண்பர்கள், அவரை வைத்து ஏற்கனவே படம் எடுத்திருக்கிறேன், இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் கண்டிப்பாக மறுக்க மாட்டார். இருந்தாலும் இப்போது தான் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. போக போக பார்ப்போம் என மோகன் ராஜா கூறியிருக்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நிச்சயம் வில்லன் கதாபாத்திரத்திற்கு பகத் பாசில் தான் வருவார் என்று தெரிகிறது.

Published by
Rohini