Connect with us
Kannadasan

Cinema History

ஒரே பாடலில் விரக தாபமும்.. துறவறமும்!.. தட்டி தூக்கிய கவியரசர் கண்ணதாசன்!..

தமிழ்ப்பட உலகில் பல முத்து முத்தான காவியப் பாடல்களைக் கொடுத்தவர் கண்ணதாசன். காதலுக்கு காதலும், தத்துவத்திற்கு தத்துவமும் என அடுக்கடுக்கான பாடல்களை அள்ளி வழங்கிய வள்ளல் இவர். எம்ஜிஆர், சிவாஜி கால கட்டத்தில் இவரது பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இப்போது கேட்டாலும் அது தனி சுகம் தான்.

நம் வாழ்க்கையின் தத்துவங்களை பல பாடல்களில் புட்டு புட்டு வைத்துள்ளார். அந்தவகையில், ஒரே பாடலில் விரகதாபத்தையும், துறவறத்தையும் வெகு அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் கவியரசர் கண்ணதாசன். அது எந்தப் படம் என்று பார்ப்போமா…

இதையும் படிங்க… பணத்தில் கறார் காட்டிய ஜெமினி கணேசன்… ஜெயலலிதாவால் கடுப்பான எம்ஜிஆர்…

இவற்றின் படி நாம் நடந்து வந்தாலே போதும். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை கிடைத்து விடும். அந்த வகையில் இந்தப் பாடலில் விரகதாபமும், துறவறமும் சரிவர கையாளப்பட்டுள்ளது. அது என்ன பாடல்? எந்தப் படத்தில் வருகிறது? எப்படி அந்த இரு வேறு விஷயங்களும் கையாளப்பட்டுள்ளன என்பது பற்றிப் பார்ப்போம்.

ஒரே பாடலில் விரகதாபமும், துறவறமும் நியாயப்படுத்துவது என்பது எளிதான விஷயம் அல்ல. தரிசனம் என்ற படத்தில் தான் இந்த அற்புதமான பாடல் வருகிறது. இது மாலை நேரத்து மயக்கம்; என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது.

இதையும் படிங்க… அட்லியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!.. இந்த கூட்டணிய எதிர்பார்க்கவே இல்லையே!…

இந்த மாலை நேரத்து மயக்கம், பூ மாலை போல் உடல் மணக்கும், இதழ் மேலே இதழ் மோதும். அந்த இன்பம் தேடுது எனக்கும் என்று பெண் விரகதாபத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடலின் பல்லவி ஆரம்பிக்கும். அதற்கு ஆண் பதில் சொல்வது அருமையாக இருக்கும். இது காலதேவனின் கலக்கம். இதை காதல் என்பது பழக்கம். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம் என்று அந்த விரகதாபத்தை மறுத்து துறவறத்தை நாடியிருப்பார்.

இந்தப் பாடல் முழுவதையும் கேட்டுப்பாருங்கள். உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். இரு வேறு எண்ணம் கொண்ட காதலன், காதலியரின் நிலைப்பாட்டை பல்லவியிலேயே இதை விட யாராலும் எளிமையாகச் சொல்லி விட முடியாது. அது தான் கவியரசர் கண்ணதாசன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top