‘சிம்பு பாத்துப்பா’.. பாத்து பாத்து கவனித்த கமல்! உள்ளுக்குள்ள இவ்ளோ மோதலா?

kamal (1)
Thug Life: மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இணையும் திரைப்படம் என்பதால் தக் லைப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது .நாயகன் படம் எப்பேர்பட்ட ஒரு கிளாசிக் கல்ட் திரைப்படமாக இருந்தது என அனைவருக்கும் தெரியும். இப்போது வரை அந்தப் படத்திற்கு என ஒரு தனி மரியாதை மதிப்பும் இருந்து வருகிறது.
அப்படி ஒரு படத்தை மீண்டும் இவர்கள் கூட்டணியில் காண முடியுமா என்று தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தக் லைப் திரைப்படம் எந்த மாதிரியான கதை என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஏ ஆர் ரகுமான் ஒரு மேடையில் நாயகன் திரைப்படம் மாதிரி இது இருக்காது. இது வேறொரு கதையாகத்தான் இருக்கும் என கூறி இருந்தார்.
இந்த படத்தில் சிம்பு ,த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிம்புவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட பத்திரிகையாளர் சந்திப்பை இந்த படக்குழு நடத்தினார்கள். அதில் சிம்புவை மிகவும் முன்னிலைப்படுத்தி கமல் ட்ரீட் செய்த விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது .
எப்பேர்ப்பட்ட நடிகர். தனக்கு அடுத்து வரும் இளம் நடிகர்களுக்கு ஒரு தூண்டுகோளாக இருக்கிறாரே என கமலை அனைவரும் பாராட்டினார்கள். சிம்புவை கவனிப்பதில் ஆகட்டும் சாப்பாடு சாப்பிடும் போது ஆகட்டும் போட்டோ எடுக்கும் போதும் ஆகட்டும் சிம்புவை தான் முதலில் முன்னிலைப்படுத்தினார் கமல். அவர் மீது இத்தனை அக்கறை கொண்டவரா கமல் என்றும் அனைவரையும் வியக்க வைத்தார் கமல் .

ஆனால் படத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கழுத்தை நெரிக்கும் மாதிரியான காட்சிகளில் நடித்திருக்கிறார்களாம் .ஆனால் படத்தின் முதல் பாடலில் இருவருமே சேர்ந்து ஆடியிருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த மாதிரியான காட்சிகள் இடம் பெறும் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் படத்தில் இருவரும் மோதுவது போல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.