கும்மி அடிச்சுருவார் போலயே! நீங்க யாரா வேணா இருந்துட்டு போங்க - ‘தக் லைஃப்’ கமல் பற்றி பிரபலம் சொன்ன தகவல்

Thug Life: இன்று ஒட்டுமொத்த திரையுலகமும் கமலின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு வருகிறது. இதில் நேற்று கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான ஒரு சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது. பிறந்த நாளின் போது இந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கும் செம ட்ரீட் வைத்தார் கமல்.

கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இணையும் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிட்டுள்ளனர். இன்று இளைஞர்கள் மத்தியில் தக் லைஃப் என்ற வார்த்த மிகவும் பிரபலமானது.

இதையும் படிங்க: ஆத்தாடி… ஒத்த ஆள நின்னு மல்லு கட்டும் அர்ச்சனா… பொண்ணுக்கு பொண்ணு சளைச்சது இல்ல போல…

இந்த நிலையில் அந்த டீஸரில் கமல் தன்னை ‘ரெங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்ற பெயரோடு அறிமுகப்படுத்தி காயல்பட்டினத்துக்காரன் என்று ஊர் பெயரையும் சேர்த்து சொல்லியிருப்பார். இதை குறிப்பிட்டு ஒரு பிரபலமான சினிமா பத்திரிக்கையாளர் சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்தார்.

அதாவது கமல் காயல்பட்டினம்னு சொல்லி அறிமுகப்படுத்துகிறார் என்றால் ஒரு வேளை காயல்பட்டினத்தில் நிஜத்தில் இப்படி ஒரு கேரக்டர் வாழ்ந்தாரா? அவரை பற்றி எடுக்கும் படமா? ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் முன்னொரு காலத்தை மையப்படுத்தி தயாராகும் படமாக இருக்கலாம் என்று கூறினார்.

இதையும் படிங்க: ‘தக்’ வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வரலாறு இதுதான்!.. அட உலக நாயகன் சும்மா வைக்கல பேர!.

ஏனெனில் காயல்பட்டினம் ஊர் மிகவும் அழகான ஆரோக்கியமான ஊராம். அந்த ஊரில் காவல் நிலையமே கிடையாதாம். அதுமட்டுமில்லாமல் டாஸ் மாக்கும் கிடையாதாம். அந்தளவுக்கு அந்த ஊர் மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி எந்தவொரு பேதமும் இல்லாமல் பழகி வருகிறார்களாம்.

ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டவர்களாக காயல்பட்டினத்து மக்கள் இருப்பார்களாம். அப்படி பட்ட ஊர் பெயரை சொல்லி கமல் இந்தப் படத்தில் நடிப்பது பின்னாளில் அந்த ஊருக்குள் இவரால் எந்த பிரச்சினையும் வராமல் இருந்தால் சரி என்று கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த டைவர்ஸ் ரெடி..! பாக்கியா போல கிளம்பிய ஜெனி..! அடுத்து யாரு அமிர்தாவா..?

 

Related Articles

Next Story