Connect with us
yuvan

Cinema News

என்னது இது யுவன் போட்ட பாட்டே இல்லையா? அதான் இந்த லட்சணத்துல இருக்கா? பீதியை கிளப்பிய தகவல்

Yuvan Sankar Raja: கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் தன்னுடைய இசையால் காதலர்களை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை அழ வைத்து சிரிக்க வைத்து வேறொரு யுகத்திற்கு கொண்டு போகும் யுவனின் இசை. அவர் இசையில் எத்தனையோ பல நல்ல பாடல்கள் இந்த சினிமாவில் அலங்கரித்து இருக்கின்றன.

இந்த பாடலுக்கு ஏன் ஒரு அவார்டு கூட கிடைக்கல என்று அனைவரும் ஏங்கிய பல பாடல்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தங்க மீன்கள் படத்தில் வரும்  அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை வெளிப்படுத்தும் பாடல், பேரன்பு படத்தில் அமைந்த ஒரு பாடல், சூப்பர் டீலக்ஸ் படத்தில் அமைந்த பிஜிஎம் அனைத்தும் தேசிய விருதுக்கு தகுதியான பாடல்கள்.

இதையும் படிங்க: குஷ்பூ இட்லினு பேர் வர்றதுக்கு காரணமே இந்த நடிகர்தானாம்.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த குஷ்பூ

ஆனால் அந்த தேசிய விருதுக்கு தான் கொடுத்து வைக்கல என்று சொல்லும் அளவுக்கு இவரின் இசை ரசிகர்களை ஆக்கிரமித்து இருக்கின்றது. தற்போது யுவன் விஜய் நடிக்கும் கோட் படத்திற்காக இசையமைத்திருக்கிறார். அந்த படத்தில் வெளியான இரண்டு சிங்கிள் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தி இருக்கின்றது.

இருந்தாலும் விஜய்க்கு உண்டான அந்த பீட் யுவனின் இசையில் இல்லை என்று தான் விஜய் ரசிகர்களின் பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் யுவன் பற்றிய ஒரு செய்தியை பிரேம்ஜி பகிர்ந்து இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: கமலா இல்ல பயில்வான் ரெங்கநாதனானு தெரியல! இந்தியன் தாத்தாவை வச்சு செய்த பிரபலம்

வல்லவன் படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு அசிஸ்டெண்டாக இருந்தவர் பிரேம்ஜிதானாம். அந்த நேரத்தில் யுவன் பல படங்களில் பிசியாக இருந்ததால் வல்லவன் படத்தில் அமைந்த லூசு பெண்ணே லூசு பெண்ணே, எம்மாடி ஆத்தாடி, காதல் வந்திருச்சு போன்ற பாடல்களை எல்லாம் பிரேம்ஜி தான் முடித்துக் கொடுத்தாராம். இந்த செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top