‘வணங்கான்’ படப்பிடிப்பில் தடுமாறிய பாலா! ஓடி வந்து உதவிய அந்த நடிகர் யாருனு தெரியுமா?

Published on: May 21, 2024
bala
---Advertisement---

Director Bala: சேது படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்தில் இருந்து தன்னுடைய அசாத்திய திறமையை காட்டியவர். பாலாவின் படங்களை பொறுத்த வரைக்கும் அவரிடம் வேலை பார்ப்பதே கடினம் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் படத்தில் நடித்தால் போதும்.. வேறு எந்த இயக்குனரிடமும் ஈசியாக வேலை பார்த்து விடலாம். அந்த அளவுக்கு மிகவும் நடிகர்களை வருத்தி அவருக்கு தேவையான நடிப்பு வரும் வரை ஒரு வழி பண்ணி விடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் வணங்கான். ஆரம்பத்தில் வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தின் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏதோ சிறு மனக்கசப்பு உருவாக சூர்யா இந்த படத்தை விட்டு விலகினார். அதுவும் சூர்யாவை அப்போது இருந்த நந்தா சூர்யா ஆகவே நினைத்திருப்பார் போல பாலா. இப்போது சூர்யாவின் மாஸ் என்ன என்பது அவருக்கு தெரியாமல் கூட போய் இருக்கலாம்.

இதையும் படிங்க: இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!… அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இவரா?

முன்பு இருந்த மனநிலையிலேயே சூர்யாவை நடத்தியதால்தான் வெறுப்பான சூர்யா படத்தில் இருந்து விலகினார் என்ற பல சர்ச்சைகள் கிளம்பின. அதன் பிறகு அருண் விஜய் இந்த படத்திற்குள் வந்தார். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது இந்த வணங்கான் திரைப்படம். இந்த படத்தின் போது பாலா சமுத்திரக்கனிக்கு போன் செய்து  ’என் கூட நீ  நில்லு டா‘ எனக் கூறியிருக்கிறார். இந்த வார்த்தையை கேட்டதும் சமுத்திரக்கனியின் மனது பதைப்பதைக்க இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடுகிறேன்.

samuthirakani
samuthirakani

இப்போது பெங்களூரில் இருக்கிறேன் என சொல்லி போனை வைத்திருக்கிறார். அவர் சொல்லி இரண்டாவது நாளில் சமுத்திரக்கனி பாலாவை வந்து சந்திக்க  ‘இந்த வணங்கான் திரைப்படத்தின் போது கொஞ்சம் மனது சங்கடமாக இருக்கிறது. கடைசி வரை இந்த படத்தில் நீ என்கூட இருக்கணும் ’என சமுத்திரக்கனியை பார்த்து பாலா கூறி இருக்கிறார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக வணங்கான் திரைப்படத்தில் கடைசிவரை ஒரு டெக்னீசியனாக பணியாற்றினார் சமுத்திரக்கனி.

இதையும் படிங்க: எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் யார்… நீயா? நானா போட்டியில் இருக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.