லோக்சபா எம்பி வெங்கடேசனால் எழுதப்பட்ட நாவல்தான் வேள்பாரி. இது தமிழக வரலாற்றில் வரும் ஒரு மன்னனின் கதையை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் தான் இந்த வேள்பாரி நாவல். கடையெழு வள்ளல்களாக வரும் பாரி வேந்தன் தான் இந்த வேள்பாரி.
முல்லைக்கு தேரையே கொடையாக கொடுத்தான் பாரி வேந்தன் என பல பள்ளிப்புத்தகங்களில் படித்திருப்போம். அவரின் கதையை மையப்படுத்தி அமைந்த நாவல்தான் வேள்பாரி. பொன்னியின் செல்வன் எப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல இந்த வேள்பாரி நாவலையும் படமாக எடுக்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதையும் படிங்க : சூர்யா நடிக்க இருந்த கேரக்டரா அது? நல்லவேளை விஜய் காப்பாத்திட்டாரு – என்ன படம் தெரியுமா?
ஆனால் கடைசியாக அந்த பொறுப்பை இயக்குனர் சங்கர் தான் கையில் எடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராக இருக்கிறது. முதலில் இந்தப் படத்தில் கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் நடிப்பதாக இருந்தது.
அதன் பிறகு பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஒரு பாரம்பரிய தமிழ் வரலாற்று மன்னனின் கதையில் இருந்து வந்த இந்த நாவலில் ஒரு பாலிவுட் நடிகரை நடிக்க வைப்பதா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
இதையும் படிங்க : அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்புதான்! – ஜெயிலர் பார்த்திவிட்டு பொங்கி எழுந்த வனிதா..
ஆனால் இப்போது இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தான் நடிக்க இருக்கிறார். அதற்கு பின்னனியில் ஒரு காரணமும் இருக்கிறதாம். சூர்யாவுக்கும் ஷங்கருக்கும் ஒரே மேனேஜர்தானாம். அதனால் சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தை பற்றியும் அவரின் ஒத்துழைப்பு பற்றியும் ஷங்கரிடம் எடுத்துரைத்தாராம். ஆகவே இந்த வேள்பாரியில் சூர்யா நடிப்பது என்பது உறுதியாகிவிட்டதாம்.
ஏ ஆர்…
தமிழ் சினிமாவில்…
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…