அட என்னப்பா சொல்றீங்க ?.. இந்தப் படத்தை தயாரிச்சது விஜயா?.. அதுவும் இவரது இயக்கத்திலா?..
தமிழ் சினிமாவில் ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் நடிகர் விஜய். இன்று ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே வலம் வருகிறார் என்றால் அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏராளமான பங்குண்டு.
ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக தன் மகனை செதுக்கி செதுக்கி இந்த அளவு உச்சத்தை அடைய வைத்திருக்கிறார். அவரது தாயான சோபாவும் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடகியாகவும் வசன கர்த்தாவும் என பன்முக திறமைகளை தன்னுள் வைத்துக் கொண்டவர்.
ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கச்சேரி பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். “மலர்கள்” படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒரு மகாராஜா, ஒரு மகாராணி பாடலை பாடியிருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் சோபா பாடவும் செய்திருக்கிறார். அதே சமயம் அவரின் படங்களுக்கு கதையுன் எழுதியிருக்கிறார். நாளயை தீர்ப்பு படத்தின் கதையை எழுதியதே சோபா தான்.
இப்படி ஒரு கலைக்குடும்பமாக இருக்கும் வீட்டில் இருந்து வந்த விஜய் ஒரு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். 1992 ஆம் ஆண்டு நீரஜ், பர்வீன், விவேக் நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘இன்னிசை மழை’ என்ற திரைப்படம். இந்தப் படத்திற்கு கதை, இயக்கம் என விஜயின் தாயான சோபா சந்திரசேகர் தான்.
இந்தப் படத்தை விஜய் தான் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையில் இன்னிசை மழை திரைப்படம் இசைக்காக மட்டுமே பாராட்டை பெற்றது. படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் கதை எழுதுவதுடன் மட்டுமே தன்னுடைய சினிமா ஆர்வத்தை வைத்துக்கொண்டார்.
ஆனால் சோபா இயக்கிய முதல் படம் ‘ நண்பர்கள்’ என்ற திரைப்படம். இந்த படத்திலும் நீரஜே நாயகனாக நடித்திருந்தார். சோபா இயக்கிய இந்த இரண்டு படங்களிலும் கதா நாயகனின் பெயரை விஜய் என்றே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இருந்தா இவங்கள மாதிரி இருக்கனும்பா!.. திரையில் மெய்சிலிர்க்க வைத்த காதல் ஜோடிகள்!..