Connect with us
captain

Cinema News

Vijayakanth: விஜயகாந்த் கெரியரில் ரிஸ்க் எடுத்து நடித்த படம்… சொல்லும் போதே புல்லரிக்குதே

Vijayakanth: ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி என்று சொல்வார்கள். அந்த வகையில் தான் நடித்த படங்களிலேயே மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்த படம் என்று விஜயகாந்த் முன்பு ஒரு பேட்டியில் கூறியது இப்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ரஜினி , கமலுக்கு இணையாக பேரும் புகழும் பெற்று விளங்கியவர் நடிகரும் கேப்டனுமான புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.

மாமனிதர்: தமிழ் திரையுலகிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் ஒரு தன்னிகரற்ற மனிதராக விளங்கினார். கள்ளம் கபடமற்ற மனிதராகவும் இருந்தார். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றுவரை ஒரு மாபெரும் கலைஞராக மனிதராகவும் திகழ்ந்து வருகிறார்.இவருடைய உதவி மனப்பான்மை வேறு எந்த நடிகருக்கும் வருமா என்பது சந்தேகம். இவருக்கு முன் எம்ஜிஆருக்குத்தான் அந்த ஒரு குணம் இருந்தது.

இதையும் படிங்க: OTT தளத்தில் உச்சபட்ச ‘சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவங்கதான்!…

அதனாலேயே இவரை கருப்பு எம்ஜிஆர் என அழைத்து வந்தனர். எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும் இருந்தார் விஜயகாந்த். இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரின் மறைவிற்கு வந்த கூட்டத்தை பார்த்து செத்தால் இப்படி சாகவேண்டும் என ஆசைப்பட்டவர் விஜயகாந்த். அவரின் ஆசையும் நிறைவேறியது. தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த படியான கூட்டம் விஜயகாந்த் இறப்புக்குத்தான் வந்தது.

சண்டைக்காட்சிகளில் பேர் போனவர்: நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் விஜயகாந்த் என்றாலே சண்டைக்காட்சிகள் தான் நியாபகத்திற்கு வரும். அதுவும் பேக் ஷாட் என்று சொல்லப்படும் காலால் பின்னாடி வழியே உதைப்பது இவருடைய ஸ்டைல். எப்படிப்பட்ட ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளாக இருக்கட்டும் டூப் போடாமல் நடித்துக் கொடுப்பார் விஜயகாந்த்.

vijayakanth

vijayakanth

இந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் இருக்கும் ஒரு சண்டைக்காட்சியை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் விஜயகாந்த். அலுவலக் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் தீவிரவாதிகள் இவரை கொலை செய்ய திட்டமிடுவார்கள். அப்போது அந்த சண்டை காட்சியில் 70லிருந்து 80 அம்பாசிடர் காரை வரிசையாக நிற்க வைத்து பயன்படுத்தியிருப்பார்கள்.

இதையும் படிங்க: Ajith: என்னது!… அடுத்த வருஷம் பொங்கலுக்கு இரண்டுமே இல்லையா?!… ஏமாற்றத்தில் அஜித் ஃபேன்ஸ்..!

18 நாள்கள் எடுக்கப்பட்ட சீன்: இந்த காட்சியை சுமார் 18 நாள்கள் எடுத்தார்கள். ஆனால் நாளொன்றுக்கு அரை மணி நேரம் மட்டும்தான் சூட்டிங் எடுத்தார்களாம். தயாரிப்பாளர் நினைத்திருந்தால் சும்மா 5 அம்பாசிடர் காரை மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. நான் நடித்த படங்களிலேயே மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்த சண்டை காட்சி என்றால் அது இந்தப் படத்தில்தான் என விஜயகாந்த் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top