தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்சமயம் மிகப்பெரும் நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு.எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு போன்ற நடிகர்கள் வெகு காலங்கள் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்து வந்தனர். ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை.
ஒய்.ஜி மகேந்திரன் எஸ்.வி சேகர் போன்ற நடிகர்களால் தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் நகைச்சுவை நடிகராக இருக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு கடினமான உழைப்பு தேவைப்பட்டது. அப்படி ஒரு உழைப்பை கொடுத்தவராக நடிகர் வடிவேலு இருந்தார்.
நடிகர் வடிவேலுவின் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தில் வருவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி அந்த படத்தில் அவரது நடிப்பும் அமைந்திருக்கும். ஒரே மாதிரியான நடிப்பை அனைத்து படங்களிலும் வடிவேலு வெளிப்படுத்த மாட்டார். இதனால்தான் வெகு காலங்கள் வடிவேலு திரைத்துறையில் இருக்க முடிந்தது.
வடிவேலுவின் ரகசியம்:
இது குறித்து வடிவேலுவிடம் கேட்கும் பொழுது இப்படியான கதாபாத்திரங்களை எங்கிருந்து நீங்கள் எடுக்கிறீர்கள்? என கேட்டார்கள் அதற்கு பதில் அளித்த வடிவேலு மதுரையில் நான் வாழ்ந்த பகுதிகளில் இருந்த மக்களை வைத்து அந்த கதாபாத்திரங்களை நான் உருவாக்குவேன் என கூறினார்.
அவரைச் சுற்றியுள்ள ஆட்டோ டிரைவர், வெட்டியான் போன்றவர்களைக் கொண்டே அந்த கதாபாத்திரங்களையும் வடிவேலு உருவாக்குவார் ஒருமுறை மதுரையில் ரவுடி ஒருவர் செய்த செயலை குறித்து வடிவேலு கூறியிருந்தார்.
நடுரோட்டில் நின்று கொண்டு ரவுடி ஒருவர் தனது துண்டை சாலையில் போட்டுவிட்டு எதிரில் வரும் லாரி பேருந்துகளிடம் அராஜகம் பண்ணிக் கொண்டிருந்தார். அந்த துண்டை தாண்டி வண்டி செல்லக்கூடாது என பெரும் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அதே விஷயத்தை நான் ஒரு படத்தில் நகைச்சுவை காட்சியாக செய்திருந்தேன் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: மனோரமா அதிகமாக பார்த்த ஒரே திரைப்படம்! – யாருக்காக தெரியுமா?
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…
TRP Tamil:…
தமிழ்நாடு திரையரங்கு…
Dhanush SK: …