பத்திக்கிட்டு எறியும் கோலிவுட் நெப்போட்டிசம்!… தனுஷின் மகனும் களமிறங்குகிறாரா? ஷாக் தரும் பிரபலம்…

Published on: January 19, 2024
---Advertisement---

Kollywood: பொதுவாக பல வருடமாகவே இந்தி சினிமாவில் தான் நெப்போடிசம் என்ற வார்த்தை அதிகமாக உலவி வந்தது. ஆனால் தற்போது இந்த பிரச்னை கோலிவுட் பக்கமும் அதிகமாகி விட்ட நிலையில் இந்த ரேஸில் தனுஷின் வாரிசும் களமிறக்க இருக்கிறார்களாம்.

இதுகுறித்து செய்யாறு பாலு கூறும்போது, இன்னைக்கு கோலிவுட்டில் நெப்போடிசம் தான் தலைவிரித்து ஆடி வருகிறது. விஜயை சினிமாவுக்கு கொண்டு வர அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிறைய உழைத்தார். அப்போது அதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. உழைப்பு இருந்ததால் விஜய் ஜெயிச்சார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க… கேப்டனை பிடிக்காதவங்கன்னு யாராவது இருந்தா அது இவங்கதான்! தலைவாசல் விஜய் சொன்ன ரகசியம்..

ஆனால் அது மட்டும் இல்லை. அப்போது விஜயிற்கு போட்டியாக இருந்தவர்களை களை எடுத்தார். ஒரு முக்கிய ஹீரோவின் பட ரிலீஸுக்கு அவருடைய ஆட்களை அனுப்பி நெகட்டிவ் விமர்சனத்தினை பரப்புவார். அந்த படம் நல்லா இல்ல என்ற பிம்பத்தை உருவாக்கியவர் சந்திரசேகர். அதுவும் விஜயின் வளர்ச்சிக்கு காரணம்.

தற்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க வந்துவிட்டார். அதுவும் லைகா மாதிரியான பெரிய கம்பெனியில் இயக்க இருக்கிறார். இதுவே சாதாரண உதவி இயக்குனர் யாராலும் லைகாவிடம் கதை சொல்ல முடியுமா? அவர்களும் கேட்டு உடனே ஓகே சொல்வார்களா? விஜயின் மகன் என்பதால் தானே இந்த வாய்ப்பு. அதுப்போலவே ஷங்கர் மகள் அதிதி.

இதையும் படிங்க… சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்தது இப்படித்தான்!.. சுவாரஸ்யம் சொன்ன ஆர்.வி.உதயகுமார்…

இந்த லிஸ்ட்டில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா. சமீபகாலமாக தனுஷ் தன்னுடைய விழாக்களில் மகனுடனே எண்ட்ரி ஆகிறார். அதில் அவர் மூத்த மகன் யாத்ரா அச்சு அசலாக சின்ன வயது ரஜினியை போன்றே இருப்பதால் விரைவில் அவரை நடிக்க அழைத்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஸ்தூரி ராஜா வைத்து தனுஷ், தனுஷை வைத்து யாத்ரா வர இருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.