உன்ன பாத்தாலே செம கிக்குதான்!.. போதையேத்தும் லுக்கில் அசத்தும் இந்துஜா...

60களில் பல திரைப்படங்களில் நடித்த ரவிச்சந்திரனின் பேத்திதான் இந்த இந்துஜா. சாஃப்ட்வே இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். துவக்கத்தில் சில குறும்படங்களில் நடித்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்தார்.
வழக்கமான தங்கையாக இல்லாமல் மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள் அவருக்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரின் நடிப்புக்காக ஆனந்த விகடன் விருதையும் இந்துஜா பெற்றார். அதன்பின் மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் ஃபுட்பால் பிளேயராக நடித்தார். தனுஷுடன் நானே வருவேன் படத்தில் நடித்தார். இப்போது காக்கி எனும் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
ஒருபக்கம், இந்துஜாவும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
சினிமாவில் இழுத்து போர்த்திகொண்டு மட்டுமே நடித்தால் வாய்ப்புகள் கிடைக்காது என்பதை புரிந்துகொண்டார் போல. அந்த வகையில், இந்துஜாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிக் ஏத்தியுள்ளது.