
Entertainment News
இவ்ளோ அழகா இருந்தா நாங்க ஃபிளாட்டு!.. சைனிங் அழகில் மனதை மயக்கும் இந்துஜா…
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் இந்த இந்துஜா. தாத்தா சினிமாவில் இருந்ததால் இந்துஜாவுக்கும் சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. வெல்லூரில் பொறியியல் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார்.
அதேபோல், சில குறும்படங்களிலும் நடித்தார். அப்படி ஒரு குறும்படத்தில் இவரை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர் தயாரித்த மேயாத மான் திரைப்படத்தில் ஒரு வேடம் கொடுத்தார். இந்த படத்தில் கதாநாயகனின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அடுத்து கார்த்தி சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தில் நடித்தார். அறுபது வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த நானே வருவேன் படத்திலும் நடித்தார். நடிப்பிற்காக சில விருதுகளையும் வாங்கியிருக்கிறார். ஒருபக்கம், அழகான உடைகளில் அசத்தலான உடையை காண்பித்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் க்யூட் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.