இந்தியாவின் முதல் 3D திரைப்படம் உருவானது இப்படித்தான்… வேற லெவல் பண்ணிருக்காங்களே!!
1984 ஆம் ஆண்டு வெளியான “மைடியர் குட்டிச் சாத்தான்” திரைப்படம் இந்திய சினிமாவின் முதல் 3D திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் ஒரு மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜிஜோ புன்னூஸ் என்பவர் இயக்கியிருந்தார்.
இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அசோக் குமார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.ஆர்.விஜயலட்சுமி, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இத்திரைப்படத்திற்கு வந்த சவால்கள் குறித்து பேசியுள்ளார்.
இத்திரைப்படம் உருவாக்கும்போது 3D தொழில்நுட்பத்திற்கான எந்த ஒரு முன்னேற்பாட்டையும் செய்யவில்லையாம். மேலும் இத்தொழில்நுட்பத்திற்கான எந்த ஒரு ஆயத்தமும் இல்லாமல்தான் இத்திரைப்படத்திற்காக பணியாற்றத் தொடங்கினார்களாம்.
மிகவும் கடினமான வேலைப் பளூ காரணமாக இத்திரைப்படத்தில் வேலை செய்த பல உதவியாளர்கள் பாதியிலேயே வேலையை விட்டுச் சென்றுவிட்டனராம். அதே போல் இத்திரைப்படத்திற்கு சூரிய ஒளிக்கு நிகரான வெளிச்சம் உடைய விளக்குகள் தேவைப்பட்டதாம்.
கிட்டத்தட்ட இந்த படத்தை முடிப்பதற்கு 83 நாட்கள் ஆனதாம். மேலும் அக்காலகட்டத்தில் இருந்த பல தொழில்நுட்ப சவால்களை எல்லாம் எதிர்கொண்டு மிகப்பெரிய சிரமத்துடன் அத்திரைப்படத்தை எடுத்து முடித்தார்களாம் அவர்கள். இவ்வாறுதான் இந்தியாவின் முதல் 3D படத்தை இயக்கிமுடித்திருக்கிறார்கள்.
பி.ஆர்.விஜயலட்சுமி ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் “சின்ன வீடு”, “சிறைப் பறவை”, “மல்லு வேட்டி மைனர்” போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதள பாதாளத்தில் விழுந்த சிவாஜி பட இயக்குனரின் குடும்பத்தை கைக்கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்… என்ன மனுஷன்யா!