×

2-18 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி - வல்லுநர் குழு அனுமதி

 
corono

இந்தியாவில் கொரோனா 2வது அலை வீசி வருகிறது. எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்புசிகள் தயாரிக்கப்பட்டு முதலில் வயதானவர்களுக்கு செலுத்தப்பட்டது. அதன்பின் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. 

இந்நிலையில், தற்போது 2-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் திட்டத்தை இந்த மாதம் துவங்கவுள்ளது.

கொரோனா 3வது அலை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் துவங்கும் எனவும், இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். எனவே, அதற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News