×

ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்த கொரோனா - மக்கள் நிம்மதி

 
corono

இந்தியா தற்போது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. இந்த முறை பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தினசரி பாதிப்பு 3 லட்சமாக உயர்ந்தது. பல நாட்கள் இந்த எண்ணிக்கையே நீடித்து வந்தது.

அதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தது. எனவே, கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு லட்சமாக குறைந்தது. நேற்று முன் தினம் இந்தியாவில் 1,00,636 பேர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது அது மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 நாட்களுக்கு பின் இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News