×

இந்தியாவில் குறைந்த தினசரி கொரோன பாதிப்பு.....பொதுமக்கள் நிம்மதி...

 
corono

தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த பல நாட்களாகவே தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று குறைய துவங்கியுள்ளது.

கடந்த 3 நாட்களாக 3 லட்சம் என்பது குறைந்து 2 லட்சமாக மாறியது. தற்போது அது மேலும் குறைந்து 2 லட்சத்திற்கு கீழே சென்றுவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,86,364 பேர் மட்டுமே கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் பொறுத்தவரை இங்கும் தளர்வுகளற்ற ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் கொரோனா குறைய துவங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று எண்ணிக்கை 33,764ஆக குறைந்துள்ளது. எனவே, நாட்கள் செல்ல செல்ல இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News