×

63 நாட்களுக்கு பின் ஒரு லட்சத்திற்கு கீழே போன கொரோனா....

 
corono

இந்தியாவில் வீசிவரும் கொரோனா 2வது அலையால் சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு 3 லட்சமாக இருந்தது. ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.நேற்று முன் தினம் இந்தியாவில் 1,00,636 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது அது மேலும் குறைந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 86,498 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 நாட்களுக்கு பின் இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழே சென்றுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழே சென்றுள்ளது. நேற்று 19,448 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News