×

ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

 
petrol

கடந்த சில வருடங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டியது. அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது 100ஐ நெருங்கிவிட்டது. அதேபோல், டீசல் விலை 90ஐ தாண்டியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ99.24 எனவும், பெட்ரோல் ரூ.101.3 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.  சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100ஐ தாண்டியது. இப்படி வட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியும்,  டீசல் விலை ரூ.100ஐ நெருங்கியும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.71 எனவும் டீசல் விலை ரூ.90.92 எனவும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News