×

கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் - மருத்துவர்கள் அறிவுறுத்தல்

 
vaccine

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்தியாவும் கோவிஷீல்டு, கோவாக்சின் என 2 தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. 

ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. 65,45,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-18 வயது வரை தடுப்பூசி போடும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்கள் தடுப்பூசி போட தேவையில்லை என மருத்துவ வல்லுனர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், தடுப்பூசியை அரைகுறையாக செலுத்தினால் அது உருமாறிய கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், நோய்க்கு பிறகு தடுப்பூசி பலன் தரும் என உறுதி செய்யப்பட்ட பின் தடுப்பூசி போடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எனவே, கொரோனாவால் அதிக ஆபத்தில் இருப்பவர்கள், நோய் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கு முதலில் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அவர் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News