×

பண்ட் தவறு செய்தால் தோனி தோனி எனக் கத்தாதீர்கள் – கோஹ்லி வேண்டுகோள் !

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மைதானத்தில் ஏதேனும் தவறுகள் செய்தால் அவரைக் கிண்டல் செய்யவேண்டாம் என இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியுள்ளார். தோனிக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங் மற்றும் கட்டுக்கோப்பில்லாத விக்கெட் கீப்பிங் ஆகியவற்றால் அதிகமாக விமர்சனம் செய்யப்படுகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணுக்கெதிரானப் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோஹ்லி இது குறித்துப் பேசியுள்ளார். அவரது பேச்சி ‘ரிஷப் பந்த் அவரது
 
பண்ட் தவறு செய்தால் தோனி தோனி எனக் கத்தாதீர்கள் – கோஹ்லி வேண்டுகோள் !

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மைதானத்தில் ஏதேனும் தவறுகள் செய்தால் அவரைக் கிண்டல் செய்யவேண்டாம் என இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியுள்ளார்.

தோனிக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங் மற்றும் கட்டுக்கோப்பில்லாத விக்கெட் கீப்பிங் ஆகியவற்றால் அதிகமாக விமர்சனம் செய்யப்படுகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணுக்கெதிரானப் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோஹ்லி இது குறித்துப் பேசியுள்ளார்.

அவரது பேச்சி ‘ரிஷப் பந்த் அவரது திறமையை நிரூபிப்பதற்கு தேவையான இருப்பை வழங்குவது அனைவரது பொறுப்பு என்று நினைக்கிறேன். அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத போது தோனி தோனி எனக் கத்தாதீர்கள். இது மரியாதையாக இல்லை. நாட்டுக்காக விளையாடும்போது நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு தேவை’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News