×

மகளை ஈவ் டீசிங் செய்த மாணவன் – டிவிட்டரில் பொங்கிய ஸ்மிருதி ராணி !

தனது மகளை பள்ளியில் ஈவ் டீசிங் செய்த மாணவனுக்குப் பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்மிருதி ராணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இதனைப் பார்த்த ஸ்மிருதி ராணியின் மகளின் சக மாணவன் ஒருவர் புகைப்படத்தில் அவர் கேவலமாக இருப்பதாக சொல்லி கேலி செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சக மாணவர்களையும் கேலி செய்ய தூண்டியுள்ளான். இதனால் அந்தப் புகைப்படத்தை ஸ்மிருதி ராணி
 
மகளை ஈவ் டீசிங் செய்த மாணவன் – டிவிட்டரில் பொங்கிய ஸ்மிருதி ராணி !

தனது மகளை பள்ளியில் ஈவ் டீசிங் செய்த மாணவனுக்குப் பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி ராணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இதனைப் பார்த்த ஸ்மிருதி ராணியின் மகளின் சக மாணவன் ஒருவர் புகைப்படத்தில் அவர் கேவலமாக இருப்பதாக சொல்லி கேலி செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சக மாணவர்களையும் கேலி செய்ய தூண்டியுள்ளான்.

இதனால் அந்தப் புகைப்படத்தை ஸ்மிருதி ராணி நீக்கிவிட ஆனாலும் கேலி, கிண்டல் மட்டும் நின்றபாடில்லை. இதனால் அந்த மாணவனுக்குக் கணடனம் தெரிவிக்கும் விதமாக ஸ்மிருதி ராணி மீண்டும் தன் மகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’எனது மகள் விளையாட்டுகள் மற்றும் கராத்தேவில் சிறந்து விளங்குபவள். கேலி கிண்டல்களால் சோர்ந்து போகமாட்டாள். என்றாவது ஒருநாள் நான் பெருமைப் படும் விதமாக அவள் சாதிப்பாள்’ எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது மகளைக் கேலி செய்த அந்த மாணவரைப் பற்றி எந்த விவரத்தையும் அவர் வெளியிடவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News