×

வைஷ்ணவி தேவி கோவிலில் தீ விபத்து.. பக்தர்கள் அதிர்ச்சி

 
kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேசாய் மாவட்டத்தில் கட்ரா என்ற இடத்தில் வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் அருகே பெரிய கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. அதில் மின் கசிவு ஏற்பட்டதால் அந்த கோவில் வளாகத்தினுள் போடப்பட்டிருந்த கொட்டகையில் தீ பற்றிக்கொண்டது. எனவே, கொட்டகை முழுவதும் தீக்கிரையானது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News