×

ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ)

எரித்துக்கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளிகள் என்கவுட்டரில் கொலை செய்யப்பட்டதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. சட்டப்படி
 
ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ)

எரித்துக்கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளிகள் என்கவுட்டரில் கொலை செய்யப்பட்டதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்து ஒருபுறம் இருந்தாலும் இதற்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ)

குறிப்பாக ஹைதராபத்தில் கல்லூரி மாணவிகள் இதை இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். இந்த செய்தி காலையில் பரவியதும், பேருந்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் சாலையில் நின்று கொண்டிருந்த காவல் அதிகாரிகளை பார்த்து கூக்குரல் எழுப்பி கைகளை அசைத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதேபோல், என் கவுண்டர் நடந்த இடத்தில் இருந்த போலீசாரை பொதுமக்கள் தோளில் தூக்கி அவர்களை கொண்டானர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News