×

எனக்கு தெரியாது… நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை.. பொறுப்பில்லாமல் பேசிய நிர்மலா சீதாராமன்

வெங்காயத்தின் விலை ஏற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கும் வெங்காய விலை அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் ரூ.100 லிருந்து 150 வரைக்கும், சின்ன வெங்காயம் ரூ.150 லிருந்து 200 வரைக்கும் அதிகரித்துள்ளது. பெரிய நகரங்களில் வெங்காயத்தின் விலையால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது எம்.பி.சுப்ரியா சுலே இதுபற்றி நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிர்மலா ‘நான்
 
எனக்கு தெரியாது… நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை.. பொறுப்பில்லாமல் பேசிய நிர்மலா சீதாராமன்

வெங்காயத்தின் விலை ஏற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடெங்கும் வெங்காய விலை அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் ரூ.100 லிருந்து 150 வரைக்கும், சின்ன வெங்காயம் ரூ.150 லிருந்து 200 வரைக்கும் அதிகரித்துள்ளது. பெரிய நகரங்களில் வெங்காயத்தின் விலையால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது எம்.பி.சுப்ரியா சுலே இதுபற்றி நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிர்மலா ‘நான் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதில்லை. எனவே, கவலைப்படாதீர்கள். வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி கவலைப்படாத குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்’ என அவர் கூறினார். இது நாடாளுமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News