×

இந்தியாவில் தினமும் குறையும் கொரோனா - மக்கள் நிம்மதி

 
corono

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவ துவங்கியது. அதன்பின் மெள்ள மெள்ள அதிகரித்து மே மாதத்தில் தினசரி பாதிப்பு 3 லட்சமாக உயர்ந்தது. எனவே, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைய துவங்கியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்திற்கும் கீழே சென்றுள்ளது.

இந்நிலையில், நேற்று இந்தியாவில் 1,20,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3380 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,67,95,549 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 15,55,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,78,60,317 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News