×

ஆப்பரேஷன் முடிந்ததும் மாத செலவுக்கு 5000 ரூபாய் – ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு !

ஆந்திராவில் உடல்நலக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் ஓய்வெடுக்கும் காலத்துக்கு மாதம் தோறும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் இப்போது மீண்டும் ஆரோக்கியஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகள் ஓய்வெடுக்கும் காலங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.225 வீதம் என
 
ஆப்பரேஷன் முடிந்ததும் மாத செலவுக்கு 5000 ரூபாய் – ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு !

ஆந்திராவில் உடல்நலக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் ஓய்வெடுக்கும் காலத்துக்கு மாதம் தோறும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் இப்போது மீண்டும் ஆரோக்கியஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகள் ஓய்வெடுக்கும் காலங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.225 வீதம் என மாதம் ரூ.5,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆந்திர மக்களிடையே பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 26 சிறப்பு பிரிவுகளில், 836 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News