×

பெண்களே கையில காண்டம் வச்சுக்குங்க.. கொலை நடக்காது… இயக்குனரின் சர்ச்சை பதிவு…

ஹைதராபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை மருத்துவரின் மரணம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்து, பெட்ரோல் ஊற்றி எரித்து அவரை கொலை செய்ததால், அவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு
 
பெண்களே கையில காண்டம் வச்சுக்குங்க.. கொலை நடக்காது… இயக்குனரின் சர்ச்சை பதிவு…

ஹைதராபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை மருத்துவரின் மரணம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்து, பெட்ரோல் ஊற்றி எரித்து அவரை கொலை செய்ததால், அவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

பெண்களே கையில காண்டம் வச்சுக்குங்க.. கொலை நடக்காது… இயக்குனரின் சர்ச்சை பதிவு…

இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனர் டேனியல் சர்வன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘கற்பழிப்பு ஒரு குற்றம் அல்ல.. கொலை மட்டுமே குற்றம்.. இது போன்ற குற்றங்களிலிருந்து தப்பிக்க பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.. அப்படி நடக்கும் போது அங்கே கொலை நடக்காது.. இதுபோன்ற சூழ்நிலைக்கு பெண்கள் இயக்கங்களே காரணம்.. கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்வதை விட காண்டம் பயன்படுத்துவதே பெண்களுக்கு நல்லது’ என்கிற ரீதியில் அவர் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News