×

இந்தியாவில் பாதிக்கு கீழ் குறைந்த கொரோனா - நிம்மதியாகும் மக்கள்

 
corono

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. முதல் அலையை விட பாதிப்பு அதிகமாக இருக்கிறது. உயிரிழப்பும் அதிகமாகவுள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. எனவே, தற்போது கொரொனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. 3 லட்சமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2713 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,85,74,350 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,65,97,655 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 16,35,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,41,09,448 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News