×

‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று!

‘இளைஞர்களே கனவு காணுங்கள்’ என்று வருங்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியான அப்துல்கலாமிற்கு இன்று 87வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகேயுள்ள இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் ஜைனுலாப்தீன்-ஆஷியம்மாள் ஆகிய இருவருக்கும் மகனாக பிறந்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். தன்னுடைய இளம் வயதிலேயே குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளிக்கு சென்ற நேரம் தவிர மற்ற சமயத்தில் செய்தித்தாள்கள் விற்று படித்து வந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ‘செயின்ட் ஜோசப் கல்லுாரி’ யில்
 
‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று!

‘இளைஞர்களே கனவு காணுங்கள்’ என்று வருங்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியான அப்துல்கலாமிற்கு இன்று 87வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று!

தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகேயுள்ள இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் ஜைனுலாப்தீன்-ஆஷியம்மாள் ஆகிய இருவருக்கும் மகனாக பிறந்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

தன்னுடைய இளம் வயதிலேயே குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளிக்கு சென்ற நேரம் தவிர மற்ற சமயத்தில் செய்தித்தாள்கள் விற்று படித்து வந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ‘செயின்ட் ஜோசப் கல்லுாரி’ யில் சேர்ந்து 1954ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்பு அப்துல்கலாம், 1955ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ‘எம்.ஐ.டி’யில் ‘விண்வெளி பொறியியல் படிப்பை’ பயின்று, பின்பு அதே கல்லுாரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக அப்துல்கலாமின் வாழ்க்கை

அப்துல்கலாம் 1960ஆம் ஆண்டு வானுார்தி அபிவிருத்தி அமைத்தல் என்ற பிரிவில் ஆராய்ச்சியைத் தொடங்கினார். இந்திய இராணுவத்திற்காக ஒரு சிறிய ஙெலிகாப்டரை தயார் செய்து கொடுத்தார்.

பின்னர், (ஐஎஸ்ஆர்ஓ) இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கிய அப்துல்கலாம், துணைக்கோள் ஏவுணைக் குழுவில் எஸ்எல்வி செயற்கைக்கோள் வடிவமைப்பதில் முக்கிய
பங்காற்றினார். ‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று!

அதைத் தொடர்ந்து, 1980ஆம் ஆண்டு எஸ்எல்வி -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக் கோளை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டார். இவரின் இந்த சாதனை உலக நாடுகள் மத்தியல் இந்தியாவிற்கு மிகுந்த பெருமையை ஏற்படுத்தி தந்தது.

1999ஆம் ஆண்டு’பொக்ரான்’ அணு ஆயுத சோதனையில் அப்துல்கலாமின் பங்கு முக்கியமானது. இவர் ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணியாற்றினார். இவர் ‘இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதா’ என அனைவராலும் போற்றப்படுகிறார்.‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜீலை 25ஆம் தேதி இந்திய நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

2002-2007 வரை குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம், பிறகு நட்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

‘அக்னி சிறகுகள்’,’இந்தியா 2020′, ‘எழுச்சி தீபங்கள்’, ‘அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை’ முதலிய நுால்கைள எழுதியுள்ளார்.

அப்துல்கலாம் பெற்ற விருதுகள்

1981 – பத்ம பூஷன் விருது

1990 – பத்ம விபூஷன் விருது

1997 – பாரத ரத்னா விருது

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

மரணம்

ஷில்லாங்கில் 2015ஆம் ஆண்டு ஜீலை 27ஆம் நாள் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் உரையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த அப்துல்கலாமை மரணம் தழுவிக் கொண்டது. அப்போது அவருக்கு வயது 83. அவரின் இறப்பானது
இந்திய இளைஞர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று!

இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன், ஏவுகணை நாயகன், அறிவியல் விஞ்ஞானி, எழுத்தாளர், சிந்தனையாளர் என பல பெயர்களுக்கு சொந்தக்காரானா ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 87வது பிறந்த தினம் இன்று. திருமணம் செய்து கொள்ளாமல் எளிய வாழ்க்கையுடன் வாழ்ந்வர். விடாமுயற்சியும்,
இனிமை பேச்சும் இவரின் சிறப்பு. தனது இலட்சத்திற்காகவே வாழ்ந்து, அதனை நிறைவேற்றி வாழ்ந்த் பெருமைக்குரியவர்களில் இவரும் ஒருவர்.

‘எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்’ ‘கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபங்கள்’ என்று இளைஞர்களுக்கு எழுச்சி நாயகனாக இருந்த அப்துல்கலாமின் கனவை நினைவாக்க நாம்
அனைவரும் பாடுபடுவோமாக!

From around the web

Trending Videos

Tamilnadu News