×

5 மணிக்கு மக்களிடம் உரையாற்றும் மோடி... முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

 
modi

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2 வது அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு மக்களிடம் பேசவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடுதல், ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு அறிவித்த நிதியுதவி திட்டங்கள், பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட சில அறிவிப்புகளை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி ஏற்கனவே பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை செய்துள்ள நிலையில், இன்று மக்களிடம் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News