×

ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் டிவிட்டர் கணக்குகள் ஹேக் – பிட்காயின் மோசடி!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் பில்கேட்ஸ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கும் இணையப்பயன்பாட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாக இருப்பது ஹேக்கர்கள்தான். சாதாரண நபர்கள் மற்றும் இல்லாது பிரபலங்களின் பாதுகாப்பான கணக்குகளை கூட ஹேக்கர்கள் உட்புகுந்து மோசடிகளை செய்துவிடுகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பிரபலங்களான அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள்  ஹேக் செய்யப்பட்டன.

அவ்வாறு ஹேக் செய்யப்பட்ட அக்கவுண்ட்களில் இருந்து பொதுவாக ‘எனக்கு அடுத்து 30 நிமிடங்களில் அனுப்பப்படும் பிட்காயின்களை நான் இரட்டிப்பாக தரப்போகிறேன்’ என அறிவிப்பு வந்துள்ளது. அதை நம்பி பலரும் பிட்காயின்களை அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னர்தான் இது ஹேக்கர்களின் வேலை எனத் தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக டிவிட்டர் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News