×

இந்தியாவில் புதிதாக தோல் பூஞ்சை நோய் - பீதியில் மக்கள்

 
skin

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. ஒரு பக்கம் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என பல நோய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு உருவாகி வருகிறது. இந்தியாவில் கணிசமான பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் புதிதாக தோல் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுர கிராமத்தை சேர்ந்த 50 வயது கொரோனா நோயாளி ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட நிலையில் காது பகுதியில் தோல் பூஞ்சை நோய் உருவானது தெரியவந்துள்ளது. இந்த நோய் இந்தியாவில் கண்டறியப்பட்டது இதுதான் முதல் முறை.

இந்த நோய் ஒருவருடமிருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் இல்லை. வேறு எந்த வகையிலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News