×

மத்திய அரசின் புதிய விதிமுறை - டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு

 
whatsapp

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள், மற்றும் ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு பாஜக அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதன்படி பாஜகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை 36 மணி நேரங்களுக்குள் நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அவதூறு செய்தியை முதலில் பகிரும் நபரை கண்டறிந்து, அவரை பற்றிய தகவல்களை நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்த விதிகளை பின்பற்ற 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த அவகாசம் நேற்றோடு முடிவடைந்ததால் பாஜகவின் விதிமுறைகளை சமூக வலைத்தளங்கள் ஏற்கவில்லை. எனவே, இன்று முதல் முகநூல் மற்றும் டிவிட்டர் ஆகியவை இன்று முதல் செயல்படாது என நேற்று தகவல் பரவியது. 

இதற்கிடையே மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பு அம்சத்திற்கும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , இந்த சட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News