×

இன்று மதியம் கரையை கடக்கும் யாஷ் புயல்.....வானிலை மையம் தகவல் 

 
yash

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த யாஷ் புயல் மேலும் வலுவடைந்து கடந்த 24ம் தேதி திங்கள்கிழமை நள்ளிரவு தீவிரப் புயலாக மாறியது. 

இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, அதி தீவிர புயலாக மாறி ஒடிஸா - மேற்கு வங்க கடலோரப்பகுதியில் பாரதீப் - சாகர் தீவுகள் இடையே தாம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகலில் க்ரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

yash

12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது ஒடிஸா, மேற்கு வாங்க கடலோரத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும்,கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

எனவே, அந்த 2 மாநிலங்களிலும் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News