இந்தியன் 2, 3, கேம் சேஞ்சர்... முதலில் வருவது எது தெரியுமா?..
உலகநாயகன் கமல் நடிப்பில் இந்தியன் 2 நீண்டநாள்களாக தயாரிப்பில் இருந்தது. இடையில் நடந்த விபத்தின் காரணமாக படத்தை ஒத்திப் போட்டனர். மீண்டும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து தற்போது படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் இந்தியன் 3 ஆகவும் பிரித்துக் கொண்டார்கள். இயக்குனர் ஷங்கரின் கைவசம் இருக்கும் மற்றொரு படம் கேம் சேஞ்சர். இந்த 3 படங்களும் இந்த ஆண்டே வர உள்ளன. இதனால் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார் ஷங்கர்.
முன்னணி இயக்குனரான ஷங்கர் தற்போது 3 படங்களைக் கைவசம் வைத்துள்ளார். பல ஆண்டுகளாக உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். இதனால் ராம் சரணனின் கேம் சேஞ்சர் படம் தாமதமானது. இந்தியன் 2 இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. தற்போது அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இந்தியன் 3 படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். மேலும் ஷங்கர் இந்த ஆண்டிலேயே இந்தியன் 3 படங்களையும் வெளியிட ஆர்வமாக உள்ளாராம். அதற்கடுத்தபடியாக கேம் சேஞ்சர் படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் இந்த ஆண்டே திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.
இந்த 3 படங்களின் ரிலீஸ்சுக்கும் இடையில் போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்பதால் தான் பல குழப்பங்கள் நிலவி வருகிறதாம். கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் ராஜூ இந்த ஆண்டில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.
அதே நேரம் ஷங்கர் இந்தியன் 3 ஐ வெளியிட திட்டமிட்டு வருகிறாராம். அதே நேரத்தில் இரு படங்களுக்கும் அவர் பணியாற்ற வேண்டும். கேம் சேஞ்சர் படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன் இசை அமைக்கிறார். கியாரா அத்வானி தான் ஹீரோயின். இந்தப் படத்தை தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.