தாத்தா வாராரு.. தாத்தா வாராரு.. விரைவில் இந்தியன் 2 பர்ஸ்ட் சிங்கிள்... கமலோட கேரக்டர் இதுதான்!

by sankaran v |
Indian 2
X

Indian 2

உலகநாயகன் கமலுக்கு வரும் ஜூன் மாதம் 2 படங்கள் வருகிறது. இந்தியன் 2, கல்கி 2898 என்ற இந்தப் படங்களுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றனர். இந்தப் படங்களுக்கான அப்டேட்டுகள் வராதா என இணையதளங்களில் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தப் படங்களுக்கான ஒரு சில அப்டேட்டுகள் வந்துள்ளன. இதுபற்றி பார்க்கலாமா...

கமல் திரையுலகில் சரித்திரம் படைத்தவர். இன்னும் அந்த உற்சாகம் சிறிதும் குறையாமல் படம் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தியன் 2 படத்தோட பர்ஸ்ட் சிங்கிள் தாத்தா வாராரு தாத்தா வாராருன்னு அனிருத் செம மாஸ் காட்டியுள்ளாராம். ஆடியோ லாஞ்ச் மே 3வது வாரம் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறதாம்.

இதையும் படிங்க... ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க! அடக்கி இருக்கிறவனை வெடிக்க வச்சிராதீங்க.. என்னாச்சு வடிவேலுவுக்கு?

கல்கி 2898 படத்திற்கு கமல் கேமியோ ரோலில் பண்ணியிருக்கிறாராம். கல்கி 2898 இயக்குனர் நாக் அஸ்வின்; பிறந்த நாளன்று கமல் அவரிடம் பேசினாராம். இந்த கேரக்டருக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று அஸ்வின் சொன்னாராம்.

இந்தக் கேரக்டரையே கமலை மனதில் வைத்துத் தான் எழுதினாராம். அதை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்துள்ளாராம் உலகநாயகன். கமலின் கேரக்டர் பெயர் சிரஞ்சீவியா, காளியா என்று பொறுத்திருந்து பார்ப்போம். தக்லைப் படத்தில் கமல் சூட்டிங்கிற்கு டெல்லி சென்றுள்ளாராம். இந்தியன் 2 படத்திற்கும், கல்கி 2898 படத்திற்கும் இன்னும் புரொமோஷன் பண்ணாமல் இருப்பது ரசிகர்களுக்கு வேதனை அளிக்கிறதாம்.

இதையும் படிங்க... கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

கமல் சார் நடிக்கும்போது எம்.எஸ்.பாஸ்கர் அவர் கண்கள் மற்றும் முகபாவனைகளை ரொம்பவே கவனிப்பாராம். ஒரு கேரக்டருக்கு இப்படி எல்லாம் நடிக்க முடியுமான்னு ரொம்பவே ஆச்சரியப்படுவாராம். இப்படியும் ஒரு கலைஞனா? நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று பெருமிதமாக சொன்னாராம் எம்.எஸ்.பாஸ்கர்.

கமலுடன் எம்எஸ்.பாஸ்கர் தசாவதாரம், உத்தமவில்லன், பாபநாசம், மீன் குழம்பும் மண் பானையும் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story