நல்ல நாள் பாத்தும் நாசமா போச்சு! ‘இந்தியன் 2’ க்கு இப்படி ஒரு பிரச்சினையா? மாரிமுத்துவின் இழப்பால் ஷங்கருக்கு விழுந்த பேரிடி
Indian2 : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் கமல் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஐந்து வருடங்களாக நடந்து கொண்டு வருகிறது. ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்து இப்போதுதான் சுமூகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்தியன் படத்தின் முதல் பாகம் ப்ளாக் பஸ்டர் வெற்றிப் பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியில் ஷங்கர் தீவிரமாக இறங்கியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: நூடுல்ஸ்க்கு பதிலாக இத்துப்போன இடியாப்பம்னு வச்சிருக்கலாம்!.. இப்படியா இம்சை பண்ணுவீங்க பாஸ்!..
இந்த நிலையில் நேற்று மாரிமுத்துவின் மரணம் இந்தியன் 2 படத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஜெய்லர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
அதனால் அவரின் இழப்பு இந்தப் படத்திற்கு விழுந்த பேரிடி என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 படத்தை ராசியில்லாத படம் என்று கூட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்தப் படத்தில் பணியாற்றிய பல பிரபலங்கள் தொடர்ந்து மரணத்தை தழுவி வருவதால் இப்படி ஒரு கருத்தை ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ஏற்கனவே இரண்டு முறை அட்டாக் ! இத செஞ்சிருக்கவே கூடாது – மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஒரு ராட்சத கிரேன் விழுந்து அதில் பணியாற்றிய ஊழியர்கள் மரணமடைந்தது, அதன் பிறகு அதில் நடித்த விவேக்கின் மரணம், அவரை அடுத்து சில மாதங்களிலேயே நெடுமுடி வேணுவின் மரணம் என மொத்த இந்தியன் 2 படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆளாக்கியது.
இதனால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியன் 2 கதாபாத்திரங்களை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இருந்தார் ஷங்கர். இதற்கிடையில் அந்தப் படத்தில் நடித்த மனோபாலாவும் உயிரிழந்தார். நேற்று நடிகர் மாரிமுத்துவின் மரணமும் ஷங்கரை ஒட்டுமொத்தமாக உட்கார வைத்து விட்டது. இதனால் தான் ரசிகர்கள் ராசியில்லாத படம் என்று கூறிவருகிறார்கள். அதுவும் எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தார்களோ தெரியவில்லை என்றும் புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாடகை தாய்க்கு பதிலா.. வாடகை அப்பா.. அனுஷ்காவுக்கு கைகொடுத்ததா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி?..