More
Categories: Cinema News latest news

‘இந்தியன் 2’ க்கு பதிலாக ‘அந்நியன் 2’னு வச்சிருக்கலாம்! கிண்டலடித்த பிரபல இயக்குனர்

இந்தியன் 2 படத்தை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர் ரசிகர்கள். இந்தளவுக்கு கமல் படமோ ஷங்கர் படமோ இப்படிப்பட்ட ஒரு விமர்சனத்தை சந்தித்தது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஷங்கரோட டச் இந்தப் படத்தில் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி பல விமர்சனங்களை இந்தியன் 2 திரைப்படம் எதிர்கொண்டு வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் அந்த ஒரு எதிர்பார்ப்புதான். ஏனெனில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பார்ட் 2 படங்கள் எல்லாமே தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இந்தியன் 2 படம் அதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கும் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் ஷங்கரின் சினிமா கெரியரிலேயே இந்தப் படம் மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி இந்தப் படத்தை பலவாறு கிண்டல் செய்திருக்கிறார். அதாவது இந்தியன் 2 என வைத்ததுக்கு பதிலாக அந்நியன் 2 என்றே வைத்திருக்கலாம். ஏனெனில் படத்தில் எல்லாமே அன்னியமாகத்தான் தெரிந்தது. கமலின் வயதுக்கும் கெட்டப்பிற்குமே வித்தியாசம் அதிகமாகவே தெரிந்தது. கமல் விதவிதமா பூச்சாண்டி காட்டுகிற மாதிரிதான் இருந்தது.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொறுத்தவரைக்கும் ஒரு கமிட்மெண்ட் இருக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இன்ஸ்பிரேஷன் தான் இந்தப் படம். முதல் பாகம் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்தப் படம் இப்படி இருக்கும் என நினைக்கவே இல்லை என பிரவீன் காந்தி கூறினார்.

praveen gandhi

கிட்டத்தட்ட படம் வெளியானதில் இருந்து இன்று வரை இந்தியன் 2 படத்தை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். அதற்காக படத்தின் நீளத்தையும் குறைத்து விட்டார்கள். அதன் பிறகாவது படம் எந்தளவு ரசிகர்களை கவரும் என தெரியவில்லை.

 

Published by
Rohini