மணிரத்னத்தை தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்!.. கமலோட வில்லன் கேரக்டருக்கும் ரஜினிக்கும் தொடர்பு?..

Published on: May 27, 2024
Kamal, Manirathnam
---Advertisement---

கமல், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து இந்தியன் படத்தை 2கே கிட்ஸ் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக வரும் ஜூன் 7 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இது அதற்கு அடுத்த மாதம் அதாவது ஜூலை 12ல் ரிலீஸாகும் இந்தியன் 2 படத்துக்கு மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க… கோட் படத்தை ஓட்ட விஜய் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!..

அதனால் தான் இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை 3 மொழிகளிலும் வெளியிட்டு இந்தியன் 2க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கப் போகிறாராம். இந்தியன் 2 மற்றும் 3 படங்களுக்கு மொத்தமே 250 கோடி பட்ஜெட் தானாம். அந்த வகையில் இரு படங்களுக்கும் தலா ரூ.125 கோடி பட்ஜெட். விக்ரம் படத்துக்கும் கடைசியாக கிட்டத்தட்ட இந்த பட்ஜெட்டில் தான் வெளியானதாம். அதனால் இந்தப் படம் நல்லா ரீச்சாகும் என்று சொல்கிறார்கள்.

ஆன்லைனில் நடக்கக்கூடிய ஒசாகா தமிழ் பிலிம் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கமல் நடித்த விக்ரம் படத்துக்கு 8 விருதுகள் கிடைத்துள்ளது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், எடிட்டர் பிலோமின் ராஜ், அனிருத் என பலருக்கும் இந்த விருதுகள் கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் மணிரத்னத்தை மிஞ்சிய கமல் படம் என்பது தான் ஆச்சரியம்.

Indian
Indian

கல்கி 2898 AD படத்தில் கமல் காளி என்ற பயங்கரமான வில்லனாக நடிக்கிறாராம். இந்தப் படத்திற்கு மிகவும் வித்தியாசமான தொழில்நுட்பத்துடன் வேலை செய்து வருகிறார்களாம். இதன் காரணமாகவே கமல் இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தோட புரோமோஷன் ஜூன் முதல் வாரம் ஆரம்பிக்கிறது. அன்று தான் டீசரும் வெளியாக உள்ளதாம்.

கமல் 3 நாள்கள் புரோமஷனுக்காக கொடுத்துள்ளாராம். 20 நிமிடம் காளியாக மிரட்ட வருகிறாராம் கமல். காளி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கமல் சிவகார்த்திகேயன் படத்துக்கும், எஸ்டிஆர் 48 படத்துக்குமான தயாரிப்புப் பணிகளையும் தொடர்ந்து வருகிறாராம். இந்தப் படங்களுக்கு தலா ரூ.150 கோடி பட்ஜெட் என்றும் சொல்லப்படுகிறது.