முழு படத்தையும் மீம் டெம்ப்ளேட்டா மாத்திட்டாங்களே! ஓடிடியில் இந்தியன் 2 படத்தை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்
Indian 2: கடந்த ஜூலை மாதம் ரிலீஸான திரைப்படம் இந்தியன் 2. கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே. சூர்யா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்த இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
அதுவும் ஷங்கர் இயக்கிய படங்களில் இந்தியன் 2 திரைப்படத்தை கிண்டல் செய்தது போல் எந்தப் படத்திற்கும் இந்தளவு விமர்சனம் வந்ததே இல்லை என்று சொல்லலாம். ஒரு ட்ரோல் மெட்டிரியலாகவே மாறியது இந்தியன் 2 திரைப்படம்.
இன்று வரை படத்தை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று இந்தியன் 2 திரைப்படம் ஓடிடியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அதற்கும் ஒரு ப்ரோமோ மூலம் படத்தை வெளியிட்டார்கள். நெட் ஃபிளிக்ஸிலும் இந்தியன் 2 திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
ஒரு சில படங்கள் தியேட்டர் ரெஸ்பான்ஸ் சரியில்லை என்றால் ஓடிடியில் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும். ஆனால் இந்தியன் 2 படத்தை பொறுத்தவரைக்கும் தியேட்டர் ரெஸ்பான்ஸை விட ஓடிடியில் இன்னும் அதிகமாக நெட்டிசன்கள் விமர்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதுவும் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எடுத்துப் போட்டு இதில் என்ன மிஸ்டேக் இருக்கிறது என்பதை ரசிகர்களே சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
சொல்லப்போனால் இப்போதுதான் இந்தியன் 2 படத்தை பெருமளவு பங்கம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தாத்தா கதறவிட போறாரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உண்மையிலேயே இந்தியன் தாத்தா ரசிகர்களை கதறத்தான் விட்டிருக்கிறார் என்றும் சொல்லி வருகிறார்கள்.
கமலுக்கும் சரி ஷங்கருக்கும் சரி இந்தப் படம் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்தியன் 3 படமும் எப்படி வரப் போகிறது என்று தெரியவில்லை.