More
Categories: Cinema News latest news

இந்தியன் 2 தோல்விக்கு ஷங்கர் செஞ்ச அந்த வேலை தான் காரணமா? இவ்ளோ நாள் தெரியாமலா இருந்தது?!

சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம். ஆனால் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை யாரும் தெளிவாகச் சொல்லவில்லை. என்னன்னு பார்க்கலாமா…

பொதுவாக எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா ஷங்கர் அப்டேட் ஆகலன்னு சொல்றாங்க. ஆனா கதை மற்றும் இசையிலும் சறுக்கல்கள் உள்ளன.

Advertising
Advertising

ஒரு இயக்குனருக்கு திரைப்படத்துறை பற்றி மட்டும் தெரிந்தால் போதாது. உலக நடப்பு நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், உலக சினிமா வளர்ச்சி, எதிர்கால அரசியல், மக்கள் பிரச்சனை, கடந்த கால மற்றும் எதிர்கால பிரச்சனை, சமூகம், அறிவியல் வளர்ச்சி பாதைகள் என எல்லாவற்றையும் யோசித்துத் தான் இயக்குனர் தன்னை அப்டேட் பண்ணிக் கொள்ள வேண்டும். காதலன், ஜீன்ஸ், பாய்ஸ் என்ற 3 படங்களைத் தவிர மற்ற எல்லாமும் ஒரே டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டவை.

ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம். அகில இந்திய அளவில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தித் தந்தன. முதல்வன் படம் ஆரம்பிக்கிறதும் தெரியாது. முடிவும் தெரியாது. இந்தியன் முதல் பாகத்தில் கமலின் நடை, உடை, பாவனை எல்லாமே அருமையாக இருக்கும்.

ஷங்கர் சின்ன சின்னக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாராம். பாடல்கள், இசைக்கும் அதே பாணியைத் தான் கடைபிடிப்பாராம். ஆனால் ஷங்கர் படங்களில் என்ன கதை என்றே பலருக்கும் தெரியாதாம். அவரது உதவி இயக்குனர்களுக்குக் கூட என்ன கதை என்றே தெரியாதாம்.

Indian 2

ஷங்கர் அந்தக் காலகட்டங்களில் உதவி இயக்குனர்களையே நல்ல கவனித்துத் திக்குமுக்காட வைத்து விடுவாராம். அவர் மிகப்பெரிய மனிதாபிமானி. புகழை விரும்பாமல் பலருக்கும் உதவி செய்யக்கூடியவர். ஷங்கரின் படங்கள் வெற்றியடைய முக்கிய காரணம் இசை, திட்டமிடுதல், காட்சிகளின் நேர்த்தி இவை தான். அவரிடம் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் மாதிரி பல நல்ல உதவி இயக்குனர்கள் அவரிடம் இருந்தனர்.

ஷங்கரே தற்போது உதவி இயக்குனர்களைத் தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே வித்தியாசமாக உள்ளதாம். ‘சிபிஎஸ்இ படிச்சிருக்கியா, உனக்குத் தமிழ் தெரியாதா’ என்று கேட்டுத் தான் தேர்வு செய்கிறாராம். அவர்களுக்கு உலக சினிமா தெரியும். ஆனால் கள அனுபவம் தெரியாது.

இவர்கள் இணையத்தில் இயங்குவார்களே தவிர மக்களின் இதயங்களில் இயங்கத் தெரியாது. சினிமா என்பது ‘ஒன் மேன் ஆர்மி’ கிடையாது. இந்தியன் 2 படத்தில் பிரம்மாண்டம் குறையவில்லை. ஆனால் மக்களின் இதயங்களைத் தொடும் வகையில் காட்சிகள் இல்லை. இன்னொன்று அனிருத்தின் இசை எடுபடவில்லை.

இதற்கு முக்கியமான காரணம் ஷங்கர் சரியாக உதவி இயக்குனர்களையும், உதவியாளர்களையும் தேர்ந்தெடுக்காதது தான் என்று திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

Published by
sankaran v