ஜெயிலர் படத்தின் 2 நாள் வசூலை கூட தாண்டாத இந்தியன் 2!... என்னடா உலக நாயகனுக்கு வந்த சோதனை!..
Indian2: லைக்காவின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் இந்தியன் 2. 1996ம் வருடம் ஷங்கரால் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம்தான் இந்தியன் தாத்தா. இந்தியன் என்கிற பெயரில் அப்போது வெளியான அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
சொந்த வாழ்வில் மகளை இழந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களையெடுக்கும் சுதந்திர போராட்ட தியாகியாக கமல் நடித்திருந்தார். படத்தின் இறுதிக்காட்சியில் லஞ்சம் வாங்கியதற்காக தனது மகனையே கொன்றுவிட்டு வெளிநாடு தப்பி சென்று விடுவார் இந்தியன் தாத்தா.
இதையும் படிங்க: சமந்தா சொன்ன மாதிரியே படம் ப்ளாப்! வேணானு சொல்லியும் கேட்கல.. புலம்பும் இயக்குனர்
இப்போது வெளியாகியுள்ள இந்தியன் 2-வில் மீண்டும் ஊழல்வாதிகளை களையெடுப்பதற்காக இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியாவுக்குள் வந்து பல பணக்கார முதலைகளை போட்டு தள்ளுவது போல கதை அமைத்திருந்தார் ஷங்கர். கடந்த 12ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியானது.
ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. 3 மணி நேரம் நீளம், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, அதிக வசனங்கள் என படமே போராடிக்கிறது என பலரும் சொன்னார்கள். மொத்தத்தில் இந்தியன் 2-வுக்கு அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தது. இப்படத்தை கிண்டலடித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் போட்டார்கள்.
இந்த படத்திற்காக கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் சித்தார்த் ஆகியோர் பெரிய அளவில் புரமோஷன் செய்தார்கள். பல மாநிலங்களுக்கும் போய் பேசினார்கள். இந்தியன் 3 பற்றி பில்டப்புக்களும் கொடுத்தார்கள். ஆனால், படத்தின் வசூல் பெரிதாக இல்லை. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்தியன் 2 திரைப்படம் 68 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
இதற்கு காரணம் படம் வெளியான அடுத்த நாளில் இருந்தே தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்தியன் 2 படம் ஜெயிலர் படத்தின் முதல் 2 நாள் வசூலை கூட தாண்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. இன்னும் 6 மாதம் கழித்து வரும் இந்தியன் 3 படமாவது ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.